ஸ்பெயின், போத்துக்கல், இத்தாலி போன்றவற்றிற்கு ஈடான பொருளாதார நெருக்கடியை நோக்கி பிரான்ஸ் சென்றுகொண்டிருப்பதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பிரான்சின் புற நகர்பகுதிகள் பலவற்றில் 40 வீதமான இளைஞர்கள் வேலையற்றோராகக் காணப்படுகின்றனர். பாரிசின் புறநகர்ப் பகுதியான செவரோன் என்ற பகுதியில் 40 வீதமான இளைஞர்கள் வேலையற்றோராகக் காணப்படுகின்றனர் என்பது குறித்த ஆய்வு ஒன்றை எக்கொனமிஸ்ட் வெளியிட்டுள்ளது.
அமரிக்காவில் ஐந்து குடும்பங்களில் ஒரு குடும்பம் உணவு முத்திரையில் உணவைப் பெற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என சிஎனெஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கிரேக்கத்தில் 60 வீதமான இளைஞர்கள் வேலையற்றோர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சத்தையும் பட்டினியையும் நோக்கி ஐரோப்பிய அமரிக்க நாடுகள் நகரும் அதேவேளை பல்தேசிய முதலாளிகள் தமது வருமானத்தைப் பலமடங்காகப் பெருக்கியுள்ளனர்.