சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்களின் அடிப்படைப் பொருளாதார உரிமைகளை அழிக்கும் அரசுகள், அவர்களிடமிருந்து சுரண்டும் பணத்தில் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றன. அதிக உரிமைபெற்ற பல்தேசிய நிறுவனங்கள் அரசுகளை நகர்த்திக்கொண்டிருக்கின்றன.அரசுகளோ பல்தேசியப் பெரு நிறுவனங்கள் சார்பாக மக்களைச் சுரண்டுகின்றன. இதனை ஜனநாயகம் என்று அழைத்துக்கொள்கிறார்கள். இத்தாலிய மக்கள் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டால் போராட்டங்களும் கிளர்ச்சிகளும் உருவாகும் நிலை காணப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் சிக்கன நடவடிக்கைகள் இன்றி இன்றைய முதலாளித்துவ அரசியல் பொருளாதார ஒழுங்கமைப்பைப் பேண முடியாத நிலையில் நாடுகள் காணப்படுகின்றன. இத்தாலியில் ஆரம்பித்த மக்கள் எதிர்ர்பு ஐரோப்பா முழுவதும் பரவும் நிலையில் பாராளுமன்ற போலி ஜனநாயகமே கேள்விக்குள்ளாகும் நிலை காணப்படுகின்றது.