இதன் மறுபுறத்தில் ஐரோப்பா முழுவதிலும் பொருளாதார நெருக்கடியின் பிரதான காரணம் பல்தேசிய நிறுவனங்களின் பணச் சுரண்டலே என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் பண நெருக்கடியைப் பயன்படுத்தி வங்கிகள் முழு நாட்டையும் சுவீகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை எப்படித் திட்டமிட வேண்டும் என்பதை வங்கிகளும் அவற்றினூடாகப் பணம் வழங்கும் வியாபார நிறுவனங்களுமே தீர்மானிக்கின்றன. உலகத்தில் விரல்விட்டெண்ணக்கூடிய சில பணக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் தேசிய அரசுகள் கொண்டுவரப்படுகின்றன. இராணுவமும் பாதுகாப்புப் படைகளும் கூட இந்த நிறுவனங்களுக்காக நேரடியாகவே இயங்கும் நிலை உருவாகி வருகிறது.