Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐரோப்பாவை குறைந்த ஊதியத்திற்கான வலையமாக மாற்றும் ஜேர்மனியின் திட்டம் : ஸ்பெயினில் ஆரம்பம்!

ஸ்பெயின் நாட்டில் வங்கிப் பொறிமுறை மீள முடியாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. 125 பில்லியன் டாலர்கள் இல்லாமல் வங்கிகள் செயற்பட முடியாத சூழலுக்குச் சென்றுள்ளன. சர்வதேச நாணய நிதியம் இந்தத் தொகையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் நிபந்தமைகளின் அடிப்படையில் ஸ்பெயினுக்குப் பண உதவியை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வங்கிகள் திவாலாவதன் பின்னணியில் பெரும் பண முதலைகளே செயற்படுகின்றனர். ஐரோப்பா தொடர்ந்தும் நிலைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட முதலீட்டாளர்கள் தமது வைப்புக்களையும், வங்கிச் செயற்பாடுகளையும் மீளப் பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் ஜேர்மனி முன் மொழிந்துள்ள ஆறு அம்ச திட்டத்தை அமுலாக்க ஆரம்பித்துள்ளனர். ஜேர்மனிய அதிபர் முகாமையகம் முன்வைத்துள்ள இந்தக் கொள்கையின் அடிப்படையில் ஐரோப்பாவில் மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் தாழ்துவதனூடாக முதலீட்டாளர்களைக் கவர்தலை முன்வைத்துள்ளனர்.
தொழிலார்களின் ஊதியத்தைக் குறைத்தல், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அகற்றுதல், பெரும் வியாபார நிறுவனங்கள் மீதான குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளையும் அகற்றுதல், அரச சேவைகளைத் தனியார்மயப்படுத்தல், அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தல் என்பனவே ஆறு அம்சத் திட்டத்தின் சாராம்சமாகும்.
இன்று ஸ்பெயின் வங்கிகளை மீட்பது என்ற பெயரில் வளங்கப்படும் பண முறிகள் ஐரோப்பாவில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர் பகுதியை உருவாக்குவதற்கான ஆரம்பமாக அமையும் என எதிர்வு கூறப்படுகிறது.
இதேவேளை ஸ்பெயினில் 16 வேறு இடங்களில் அரசிற்கு எதிரான போராட்டங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடைபெற்றது. பிரித்தானியாவின் நிதி மூலதனத்தை ஆதரமாகக் கொண்டுள்ள பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தினுள் பிரவேசித்துள்ளது.

Exit mobile version