
செயலிழந்து போன வங்கி- நிதி மூலதனம் மீண்டும் தலையெடுக்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. இதற்கெல்லாம் எதிராக மக்களின் போராட்டங்களைத் தடுக்கும் வகையில் பயங்கரவாதத்தைக் காரணம்காட்டில் மக்களைக் கண்காணிக்கும் பொறிமுறைகளை ஐரோப்பிய அரசுகள் ஏற்கனவே உருவாக்கிவிட்டன. அழிந்துபோகும் இந்த அரசுகளை மிளமைக்கும் புதிய பொருளாதார ஒழுங்கமைவில் மலிவான கூலி அடிமைகளை ஐரோப்பாவின் உள்ளேயே பல்தேசிய நிறுவனங்களுக்காக இயங்கும் அரசுகள் உருவாக்க முனைகின்றன. மலிவான அடிமைகள் உருவாக்கப்பட்ட பின்னர் மூன்றாமுலக நாடுகளிலிருந்து உற்பத்தி நிறுவனங்களை ஐரோப்பாவை நோக்கிக் கவர்வதற்கான திட்டமிடலை ஐரோப்பிய அர்சுகள் வகுக்க ஆரம்பித்துவிட்டன.