Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐரோப்பாவில் தொடரும் உரிமைப் போராட்டங்கள்

பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக ஐரோப்பா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப் பெற்றுக்கொண்ட உரிமைகளான ஓய்வூதியத் திட்டம், வேலையற்றோருகான உதவித்தொகை, குழந்தைகளுக்கான உதவித்தொகை, வதிவிட உதவித்தொகை போன்றவற்றை சிறுகச் சிறுக நீக்கும் முயற்சியில் உலக முதலாளித்துவம் முனைப்புக்காட்டி வருகிறது. மக்கள் அரசுகளுக்கு எதிரான போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியாவில் அதன் தொழிற்சங்கங்களின் பலம் குன்றியிருப்பதால் உடனடியான போராட்டங்கள் எதுவும் உருவாகவில்லை. ஆனால் அதற்கான சூழல் காணப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2ம் திகதி நடந்த ஆர்ப்பாட்டங்களில் பிரான்ஸ் முழுவதும் 2 மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். எதிர்வரும் 12ம் திகதி தொழிற்சங்கங்கள் புதிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன. பிரஞ்சு அரசும் அதன் தலைவருமான நிக்கோலா சார்க்கோசி எந்த குறைந்த பட்ச உடன்பாடிற்கும் முன்வரத் தயாராகவில்லை. அதே வேளை பிழைப்புவாதத் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தக்கூடாது என அழைப்புவிடுக்கின்றனர். உழைக்கும் மக்கள் அதற்குத் தயாராக இல்லாத நிலையில் போராட்டங்கள் தொடரும் என தெரிவிக்க்கப்படுகிறது.

Exit mobile version