Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐந்து நாட்களுக்கு ஒருமுறை ஒருவர் கடத்தப்படுகிறார் : ராஜபக்சவின் இராணுவ சர்வாதிகாரம்

ராஜபக்சவின் இராணுவ சர்வாதிகார ஆட்சியில் ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒருவர் கடத்தப்படுகின்றார் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட போரளிகளே இவ்வாறு கடத்தப்படுகின்றனர். வசந்தமாலா என்ற 31 வயதான பெண் வவுனியாவில் அரச உளவுத்துறையால் கடத்திச் செல்லப்பட்டு இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவரது பெற்றார் காவல் நிலையத்தில் முறையிட்டபோதும் அவர்கள் முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டனர்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும் அரச எதிர்ப்பாளர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் கடத்திச் செல்லப்படுகின்றனர்.
இதேவேளை புலி ஆதரவு அடிப்படைவாதிகள் புலம்பெயர் நாடுகளிலிருந்து சென்று சொத்துக்களுக்காகவும், பண முதலீட்டிற்காகவும் இலங்கை அரசுடன் பேச்சுக்கள் நடத்துகின்றனர் என்ற உண்மையை அடிப்படைவாதிகளின் இணையம் ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது.

Exit mobile version