ஐக்கிய நாடுகள் சபை(UN) இன்று வெளியிட்டுள்ள செய்மதி ஒளிப்படமொன்றில் அப்பாவிப் பொதுமக்கள் மீது சிறீ லங்கா அரசு விமானக் குண்டு வீச்சு நடாத்தியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கை ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ள இவ்வொளிப்படத் தொகுப்பானது, மனித உரிமைகளுக்கான சர்வதேசச் சட்டங்களை சிறீ லங்கா அரசு மீறியுள்ளதையும் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதையும் நிறுவத்தக்க ஆதாரங்கள் உள்ளதாக மனித் உரிமை வாதிகள் தெரிவிக்கின்றனர் என இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ரைம்ஸ் நாளிதழ் தெரிவிக்கின்றது.
பெப் 5ம் திகதிக்கும் ஏப் 16 ம் திகதிக்கும் இடையில் பதியப் பட்டுள்ள செய்மதிப் ஒளிப்படங்களை அடிப்படையாககொண்ட இந்த அறிக்கையானது, உதவி அமைப்புக்களின் ஊழியர்கள், மற்றும் மருத்துவர்கள், வெளியேறிய பொதுமக்களின் கூற்றுக்களை உறுதிப்படுத்துவதாக உள்ளது என ரைம்ஸ் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
தவிர இலங்கை சென்று திரும்பியுள்ள பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர், யுத்தக்குற்றங்கள் உடன்டியாகவும், சுதந்திரமாகவும் விசாரணைசெய்யப்படவேண்டும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.
பல மாதங்களாக இலங்கை அரசு பொய்செய்திகளை வெளியிட்டு வந்ருப்பது இப்போது தெரியவந்திருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRW) அவசர உதவிகளுக்கான பொறுப்பதிகாரி பீற்ற போற்கர்ட் செய்மதிப் ஒளிப்படங்களை வெளியானதையடுத்து கருத்து வெளியிட்டார்.
தவிர இலங்கை சென்று திரும்பியுள்ள பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர், யுத்தக்குற்றங்கள் உடன்டியாகவும், சுதந்திரமாகவும் விசாரணைசெய்யப்படவேண்டும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.