வெற்றிக் களிப்பின் ஆபத்தை உணர்ந்து கொள்ளுமாறு இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் பன் கீ மூன் 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபையில் உரையாற்றிய பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் தெரிவித்தார்.
வெற்றிக் களிப்பில் மிதப்பதை விட ஏற்பட்ட வடுவை குணமாக்க இணைந்து கொள்வதே இன்றைய தருணத்தில் பிரதானமானது என மேலும் அவர் தெரிவித்தார்.
எங்கேயாவது, எப்போதாவது மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்படுவது தொடர்பான நம்பிக்கையான ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுமானால், அது தொடர்பாக சரியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஐ.நா சபை திட்டமிட்டே இலங்கையில் நடைபெற்ற மனிதப் படுகொலைகளை மறைப்பதாகவும், குறைத்து மதிப்பிடுவதாகவும் பிரான்ஸ் லூ மொந், பிரித்தானிய டைம்ஸ் மற்றும் கார்டியன் பத்திரிகைகளில் வெளியான குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.
முகாம்களிலுள்ள இளைஞர்கள் அரச துணைக் குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டுக் கொலைசெய்யப்படுவது தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆவணமும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதே வேளை வெள்ளியன்று காலை சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசிற்கெதிரான போர்க் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு பாதுகாப்புச் சபையைக் கேடுக்கொண்டது.
தவிர மனிதப்படுகொலைகளை திட்டமிட்டு அலட்சியம் செய்த ஐ.நா சபைச் செயலாளர் பன் கீ முனை பதவி விலகுமாறு பிரித்தானிய மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் கோரத் தீர்மானித்துளதாக செய்திகள் வெளியாகின.