Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் நிறைவேற்ற இருந்த கண்டன தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.

04.01.2009.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. பாது காப்புக் கவுன்சில் நிறைவேற்ற இருந்த தீர்மானத்தை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.

காசா மீது இஸ்ரேல் தரை வழித்தாக்குதலைத் தொடங்கி யுள்ளது. இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் – பேரணிகள் நடைபெற்று வரு கின்றன.

இந்நிலையில் காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் வேண்டுமென்று ஐ.நா. பாது காப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட வேண்டுமென்று லிபியா வேண்டுகோள் விடுத்தது. இஸ் ரேலின் நடவடிக்கையைக் கண்டிக்க மறுத்துவரும் அமெரிக்கா இங்கும் தலையிட்டு, இஸ்ரேல் குறித்த அறிக்கையை தடுத்துவிட்டது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன் சிலின் ரகசியக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களில் எந்த வொரு முடிவையும் எடுக்கவிடாமல் அமெரிக்கா தடுத்தது என்று பாதுகாப்புக் கவுன்சிலில் உறுப் பினராக உள்ள ஒரே அரபு நாடான லிபியாவின் ஐ.நா.வுக்கான தூதர் கியாடல்லா எட்டால்ஹி கூறினார்.

சமரச அடிப்படையில் அறிக்கையில் கூர்மையைக் குறைக்கும் முயற்சிகளில் கூட கருத்தொற் றுமை ஏற்பட அமெரிக்கா அனுமதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version