Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐ.நா. தட்பவெப்ப மாநாடு: பெண்களின் அறிவு ஓரங்கட்டப்படுகிறது.

09.12.2008.

தட்பவெப்ப மாற்றம் குறித்த புதிய ஒப்பந்தத்தில் பெண்களைப் பாதிக்கக் கூடிய விஷயங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப் பட வேண்டும் என்று சர்வ தேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் (இன்டர்நேஷ னல் யூனியன் பார் கன்சர் வேசன் ஆப் நேச்சர் – ஐயூ சிஎன்) பிரதிநிதி லோரினா அக்விலர் உள்ளிட்ட பலர் ஐ.நா. தட்பவெப்ப மாநாட் டில் பேசினர்.

போலந்து நாட்டின் போஸ்னான் நகரில் ஐ.நா. தட்பவெப்ப மாநாடு நடை பெறுகிறது. 2012 உடன் கியோட்டோ ஒப்பந்தம் காலாவதியாகிறது. இதற்குப் பதிலாக புதிய ஒப்பந்தம் உருவாவது குறித்து இம் மாநாடு விவாதிக்கிறது.

பாலினக் குருடு

இந்த மாநாட்டில் பல சுற்றுச் சூழல் அமைப்பு களும் கலந்து கொள்கின் றன. வளரும் நாடுகளில் உள்ள ஏழைப் பெண்கள் தட்பவெப்ப மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்படு கின்றனர். மரபுரீதியாகப் பெண்களின் வேலைகள் எனக் கூறப்படும் விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற் றும் நீர்நிர்வாகம் போன் றவை தட்ப வெப்ப மாற்றத் தால் கடுமையாக பாதிக்கப் படக் கூடியவை. வறட்சி மற் றும் வெள்ளம்n பான்றவற் றால் கடுமையாகப் பாதிக் கப்படக் கூடியவர்களும் சிறுமிகளாவர். நிலைமை இப்படியிருக்க ஐ.நா. தட்ப வெப்ப மாநாடு பாலினக் குருடாக உள்ளது என்று தென் ஆப்பிரிக்கா சுற்றுச் சூழல் மற்றும் சுற்றுலா துணை அமைச்சர் ரிஜாய்ஸ் மபுடாபாசி குற்றம் சாட்டி னார்.

தட்பவெப்ப மாற்ற ஏற்பு நிதியில் மூன்றில் ஒருபங்கை பெண்களின் உறுதியை வளர்க்க க்கூடிய உள்ளூர் பணிகளுக்கு ஒதுக்க வேண் டுமென்று ஜென்டர் சிசி அமைப்பு அறிவுறுத்தியது.

ஐ.நா. தட்பவெப்ப மாற்ற நடைமுறை ஒப்பந்த மாநாடு மட்டுமே பெண்கள் குறித்த விஷயங்களை அணுகாத சர்வதேச மாநாடு என்று ஐயூசிஎன் பிரதிநிதி லோரின் அக்விலர் கூறினார். இதை மாற்ற வேண்டும் என்று கூறிய அவர் பெண்கள் கூறிய முன்மொழிவுகளில் அக்கறை காட்டப்பட வில்லை என்றும் கூறினார். தட்பவெப்ப மாற்ற கொள்கை வகுப்பில் பெண்களை ஓரங் கட்டக்கூடாது. ஏனெனில் தட்பவெப்ப மாற்றங்களில் இருந்து மக்களைப் பாது காக்கக் கூடிய சுற்றுச் சூழல் ஞானம் பெண்களிடம் உள் ளது என்று அவர் வாதாடி னார்.

Exit mobile version