தெரிந்து கொண்டே மருத்துவமனைகளுக்கு ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது இலங்கை அரசு. அரச உயர் அதிகாரிகளும், இராணுவ உயர் அதிகாரிகளும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர், என்று இந்த நிறுவனத்தின் கற்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரச சார்பு கொழும்பு ஊடகமான சன்டேஒப்சேவர் சரத் போன்சேகாவை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்கான சதி முயற்சியின் ஒருபகுதியே இந்த அறிக்கை எனக் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது தாங்கள் இரகசியமாக சேகரித்த ஆதாரங்களின் அடிப்படையில் 54 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள பன்னாட்டு சிக்கல் தீ்ர்வுக் குழு, இலங்கைப் போரில் ஐ.நா.வின் நடத்தை குறித்து அது தன்னைத் தானே விசாரித்தறிய வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறியுள்ள லூயிஸ் ஆர்பர், “இலங்கைப் போர் குறித்து ஐ.நா. கடைபிடித்து வரும் மெளனம், அது ராஜபக்ச அரசுடன் இணைந்து செயல்பட்டதோ என்று ஐயப்பட வைக்கிறது” என்று கூறியுள்ளார்.
ராஜபக்ச அரசு தண்டிக்கப்படாவிட்டால், ஏனிய நாடுகளும் தமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு இலங்கை அரசை ஒரு உதாரணமாகப் பயன்படுத்தலாம் என அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் போராளிகள் மீதும் இலங்கைக்கு ஒப்பான தாக்குதல் நடத்தப்பட எதிர்காலத்தில் வாய்ப்புண்டு என்பதை ஏற்கனவே பல அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் தன்னார்வ நிறுவனங்கள் மேற்கின் நலனிற்காகக் களமிறங்கியிருக்கின்றன. மக்கள் சார்ந்த அமைப்பொன்று பலமாக இருக்குமானால் இவ்வாறான தகவல்கள் பயனுடையதாய் அமைய வாய்புண்டு.
இலங்கையில் நடத்தப்பட்ட சோதனை இந்தியாவில் இன்று பரிசீலிக்கப்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள் : இந்திய அரச பயங்கரவாதம்