தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதும் இலங்கை அரசாங்கத்தின் மீதும் போர்க் குற்றங்களை முன்வைக்கும் ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு அறிக்கை நீதியான முறையில் தயாரிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தன்னை மனித உரிமையின் பாதுகாவலனாகக் கூறிக்கொள்ளும் ஐ,நா நிறுவனத்தின் முன்னாலேயே பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் மகிந்த ராஜபக்ச அரசினால் கொல்லப்பட்டனர்.
எண்ணை வளங்க்ளை மேற்கு நாடுகள் கொள்ளையடிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதற்காக உலகின் மூலை முடுக்கெல்லாம் மூக்கை நுளைக்கும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற போது மூச்சுகூட விடவில்லை.
உலக மக்களும் தமிழ்ப் பேசும் மக்களும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு இனக் கொலையாளி ஐரோப்பாவின் இதயப் பகுதியிலிருந்து ஐக்கிய நாடுகளின் அறிக்கைக்கு எதிராகப் பேசுகின்ற வரைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதே ஐக்கிய நாடுகளையும ஐரோப்பாவையும் இனம்கண்டுகொள்ளப் போதுமானது.