ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மலையக மக்களின் மனித உரிமைகள நிலை தொடர்பில் அறிந்து கொள்ள மலையக பிராந்தியங்களுக்கு வருகைதர வேண்டும்
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் பற்றி பரிசீலனை செய்வதற்கு அல்லது மதிப்பீடு செய்வதற்கு வருமை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர தலைமையிலான குழுவினர், இங்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக அடிப்படையுரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில் வாழும் மலையக மக்கள் தொடர்பில் ஆராய வேண்டும். அதற்காக மலையக பிராந்தியங்களுக்கு வருகைதர வேண்டும், மலையக அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மலையக சிவில் சமுக அங்கத்தவர்களையும் சந்திக்க வேண்டும்.
மலையக மக்கள் காணியுரிமையின்றியும், அடிப்படையான பல உரிமைகள் மீறப்பட்ட நிலையிலும்; இரண்டாந்தர பிரஜைகளாக வாழும் மலையக மக்களின் வாழும் உரிமைகள், தொழிலுரிமை, அரசியலுரிமை பற்றி சர்வதேசம் தெரிந்துகொள்ள இது சிறந்த வாய்ப்பு எனவே மலையக மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமுகத்தினர் பயன்படுத்தவேண்டும் என மலையக சிவில் சமுகம் வேண்டுகோள் விடுக்கின்றது.
நன்றி
இப்படிக்கு,
செயலாளர்
எஸ். மோகனராஜன் சட்டத்தரணி
மலையக சிவில் சமூகம்
Secretary
S. Mohanarajan LL.B (Hons) (Colombo),
DIE (Col), DAPS (U.K)
Attorney-at-Law, Notary Public, Commissioner for Oaths &
Registered Company Secretary.
072 400 7080