Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐக்கியநாடுகள் விசாரணைகள் – தொடரும் சந்தேகங்கள்! : அழுத்தங்களின் அவசியம்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதைக் கண்டறியும் பொருட்டு ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்துள்ள நிபுணர் குழுவானது வெறும் கண்துடைப்பு என்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன. அவை உண்மைதான் என்று நிரூபிக்குமாற்போலவே தற்போது சம்பவங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.

கடந்த செப்டம்பர் 16ம் திகதி நிபுணர் குழுவின் பணிகள் ஆரம்பிக்கப்பட முன்னரும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரும் இலங்கை அரசாங்கம் அந்த நிபுணர் குழு தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்றும் உறுதியாகத் தெரிவித்திருந்தது.

அத்துடன் ஐ.நா. நிபுணர் குழு என்ற விடயம் பேசப்படத் தொடங்கியவுடனேயே இலங்கை அரசாங்கம் உடனடியாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் அமர்வுகளில் சாட்சியமளிக்கச் செல்கின்றவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுவதும்ää மிரட்டப்படுவதும் வாடிக்கையாகிப் போயிருக்கும் விடயங்களாகி விட்டன.
இவ்வாறான நிலையில் தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமன்றி புலம் பெயர் தமிழர்களும் கூட அதன் பணிகளின் பால் நம்பிக்கை வைத்தனர். அநீதிக்குள்ளான தமது சமூகத்துக்கு நீதி கிட்ட அந்த ஆணைக்குழு வழியமைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர்.
ஆனால் அண்மையில் வெளிவந்த தகவல் ஒன்று அந்த நம்பிக்கைகள் அனைத்தையும் கணப் பொழுதில் தகர்த்துவிடுமாற் போலிருந்தது.
அதாவது ஐ.நா. நிபுணர் குழுவிற்கு முறைப்பாடுகள் அனைத்தும் ஈமெயில் மற்றும் தபால் மூலமாகவே சமர்ப்பிக்கப்படலாம் என்ற கட்டுப்பாடு ஆரம்பத்திலேயே விதிக்கப்பட்டிருந்தது. அவ்வாறான நிலையில் அவர்களால் வழங்கப்பட்ட ஈமெயில் முகவரிக்கு அனுப்பப்பட்ட ஈமெயிலுக்கு அனுப்பிய தகவல்கள் சென்றடையாமல் அனுப்பியவருடைய மெயிலுக்கே திரும்பிய சம்பவங்கள் மற்றும் பதிவுத்தபால்களை பொறுப்பெடுக்க நிபுணர் குழுவின் அலுவலகத்தில் யாருமின்றி அனுப்பியவருக்கே திருப்பப்பட்ட சம்பவங்கள் குறித்தும் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியிருந்தது.
நிபுணர் குழுவின் செயற்பாடுகள் மீது மலைபோன்று நம்பிக்கை வைத்திருந்த அனைவரும் அத்தகவல் வெளியானவுடன் இடிந்து போயினர்.
குறித்த தகவல் வெளியானவுடன் ஆணைக்குழுவின் விசாரணைக்காலம் நீட்டிக்கப்படுவதாகவும்ää ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இலங்கை சென்று விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் அவசர அவசரமாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
ஆயினும் அதனை எந்தளவு தூரம் நம்பலாம் என்ற கேள்வியே எங்கும் எல்லோர் மனதிலும் வியாபித்துள்ளது.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பொன்றும் அதற்குத் தூபம் இடுமாற்போல் அமைந்துள்ளது.
அதாவது இலங்கை வரும் நிபுணர் குழுவானது அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளைக் கண்காணிப்பதுடன்ää அதன் சாட்சியங்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள மட்டுமே வரவுள்ளதாக அரசாங்கத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் எப்பேர்து இலங்கை செல்லவுள்ளார்கள் என்ற விபரமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் அனுப்பப்பட்ட முறைப்பர்டுகளுக்கு நடந்த கதி இவ்விடயத்திலும் நடந்து விடுமோ என்ற ஐயம் மேலோங்குவது தவிர்க்க முடியாததாகின்றது.
அத்துடன் போர்க்குற்றம் தொடர்பான தெளிவான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும்ää போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஐக்கிய நாடுகள் சபையானது இன்னும் அசமந்தப் போக்குடன் செயற்படுவதானது அதன் நம்பகத்தன்மையையே கேள்விக்குறிக்குள்ளாக்குகின்றது.
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மே மாதம் 15ம் திகதி விஜய் நம்பியாரின் இலங்கை விஜயத்தை நம்பியே அதன் முக்கிய தலைவர்கள் ஆரம்ப கட்டமாகச் சரணடைந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் கடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அதெல்லாம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் தெரிந்தே இருந்தது. ஆயினும் அதனையெல்லாம் கண்டும் காணாததது போன்றே ஐ.நா. நடந்து கொள்கின்றது. அல்லது அவற்றைக் கிளறப் போய் அதில் மறைந்துள்ள தன் பங்கும் வெளிவந்து விடும் என்ற அச்சம் அதற்குள்ளதோ தெரியாது.
இப்படியான விடயங்களால் நிபுணர் குழுவின் செயற்பாட்டின் மீது கடும் நம்பிக்கை வைத்திருந்த சாதாரண மக்கள் தற்போது ஏமாற்றத்துக்குள்ளாகத் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறான பின்புலத்தில் நிபுணர் குழுவை இலங்கைக்குள்ளேயே அனுமதிக்க விடப் போவதில்லை என்று அமைச்சர் விமல் வீரவங்ச சூளுரைத்துள்ளார். அவ்வாறு அவர்கள் வருகை தரும் பட்சத்தில் தன் கட்சி ஆதரவாளர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவும் தாம் தயாராக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
நிபுணர் குழு விவகாரத்தில் ஏற்கெனவே அவர் சாகும் வரை உண்ணாவிரதமிருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில்  ஐக்கியநாடுகளை  இலங்கைப் போர்க்குற்ற விசாரணைகளில்  இலங்கை அரசிற்குத் தண்டனை வழங்குமாறு  அழுத்தம் வழங்கும் போராட்டங்கள் நடத்தப்படுவது  அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

Exit mobile version