Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஐஃபா விழாவில் பங்கேற்றவர்களின் படங்கள் தென்னிந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறி கொழும்பு விழாவில் பங்கேற்ற ஹிருத்திக் ரோஷன் நடித்த கைட்ஸ் படம் சென்னையில் நேற்றிலிருந்து தென்னிந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது இப்படத்தை புகழ்பெற்ற இயக்குநர் கரண்ஜோகர் இயக்கியிருந்தா என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மட்டும் ஈகா, சத்யம், பி.வி.ஆர்., ஐநாக்ஸ் ஆகிய மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் திரையிட தயாராகவிருந்த நிலையில் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து படம் திரையிடுவதைக் தியேட்டர் உரிமையாளர்கள் கைவிட்டனர்.தென்னகமெங்கும் 5 மாநிலங்களில் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஹைதராபாத், பெங்களூர், மைசூர் நகரங்களிலும் இந்தப் படத்தை தூக்க வேண்டும் என நாம் தமிழர் அமைப்பு திரைப்பட கூட்டமைப்பைக் கேட்டுக் கொண்டுள்ளது.தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பில் 5 மாநில திரைப்பட சங்கங்களும் அங்கம் வகிக்கின்றன. எனவே ஹ்ரித்திக் படத்தை உடனடியாக அனைத்து திரையரங்குகளிலிருந்து தூக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கேராளவில் ஏற்கனவே இந்தத் தடை அமுலுக்கு வந்து விட்டதால் இந்த கைட்ஸ் படம் கேரளா, தமிழகம் முழுக்க எங்குமே திரையிடப்பட வில்லை.

இந்நிலையில் பெஃப்ஸி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இலங்கையில் நடைபெறும் படவிழாவில் பங்கேற்க வேண்டாம் என்று தென்னிந்திய திரையுலகின் அனைத்து அமைப்புகளும் கேட்டுக் கொண்டன. அதை ஏற்று பலபேர் அவ்விழாவுக்கு செல்லவில்லை. எங்கள் வேண்டுகோளுக்கு மரியாதை கொடுத்து அமிதாப்பச்சன், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கரெல்லாம் விழாவுக்கு போகவில்லை. தென்னிந்திய சினிமாவின் பிற மொழிக் கலைஞர்கள் ஒருவர் கூட இந்த விழாவுக்குப் போகவில்லை. அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் வேண்டுகோளை மதிக்காமல் அந்த மயான பூமியில் நடந்த விழாவில் சில சில்லரை நடிகர்நடிகைகள் பங்கேற்று உள்ளனர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். சல்மான்கான், விவேக் ஓபராய், பிபாஷா பாசு, ஹ்ரித்திக் ரோஷன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நமது உணர்வுகளை மிதித்துவிட்டு இந்த விழாவில் பங்கெடுத்துள்ளனர். இனி இவர்கள் படங்களை தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் திரையிடமாட்டோம். தொழில் ரீதியான எந்த ஒத்துழைப்பையும் ஃபெப்ஸி வழங்காது. இதில் உறுதியாக உள்ளோம்..” என்றார்.

Exit mobile version