Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஏ.எப்.பி ஊடகவியலாளர் மெல் குணசேகர கொல்லப்பட்டார்

Mel-Gunesekeraஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் முன்னை நாள் ஊடகவியலாளரும் பொருளாதார ஆய்வாளருமான மெல் குணசேகர அவரது வீட்டில் வைத்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். கத்தி ஒன்றினால் குத்திக் கொலைசெய்யப்பட்ட மெல் குணசேகர தனிமையிலிருந்த போதே இக் கொலை நடைபெற்றுள்ளது. 46 வயதுடைய இவரின் மரணம் இலங்கை பாசிச அரசின் திட்டமிட்ட தொடர் கொலைகளில் ஒன்றா என்ற தகவல்கள் வெளியாகவில்லை. பத்தரமுல்லை என்ற கொழும்பு புறநகர்ப் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்துவந்த குணசேகரவின் பெற்றோர் தேவாலயத்திற்குச் சென்று திரும்பும் வேளையிலேயே கொலை நடைபெற்றுள்ளது.

கொலையாளியிடமிருந்து தப்பிப்பதற்கான குணசேகர போராடியதற்கான தடையங்கள் கிடைத்துள்ளதாக போலிஸ் செய்திகள் தெரிவித்தன.

Exit mobile version