சிக்கனம் என்ற பெயரில் பொதுமக்கள் பாதுக்காப்பு மற்றும் வாழ்வாதர உதவிகளை அழித்துவரும் ஐரோப்பிய அரசுகள் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் மூலதனக் கொள்ளையை ஊக்குவித்து வருகின்றன. ஸ்ரார்பக், கூகுள், அமசோன் உட்பட பல நிறுவனங்கள் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை அரசுகள் ஊக்கப்படுத்தும் அதே வேளை மக்கள் சொத்துக்களைச் சூறையாடி வருகின்றன.
குற்றம் சுமத்தப்படும் ஏழைகள் தமக்கான வக்கீல்களை அமர்த்தி வாதாடுவதற்கான உதவிப்பணத்தை குறைப்பதன் ஊடாகம் அரசு ஏழைகளைக் கிரிமினல்களாக்க முனைகிறது என்று பரவலாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.
உதவித் தொகையில் 350 மில்லியன் பவுண்ஸ் பணத்தொகை குறைக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.