Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஏழைகளுக்கான குறைந்தபசத் திட்டங்களைக் கூட ரத்துச்செய்யும் ஜெயலலிதா அரசு : தொடரும் போராட்டங்கள்

 

உலகின் அதிக வறுமையான நாடாகக் கணிக்கப்பட நாடுகளை விட வறுமையான பெரும்பான்மை மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்தியாவில் ஏழைகம்மக்களின் அடிப்படை வசதிகளைக் கூட அதிகார வர்க்கம் தட்டிப்பறிக்கிறது. இந்த வகையில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சமச்சீர்க் கல்வித்திட்டத்தை ரத்துச் செய்திருந்தார். ஈழத் தமிழ்மக்களுக்கு வெற்றுத் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்கள் மீது வெளிப்படையான அடக்குமுறை செயற்படுத்தப்பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் சார்பு அமைப்புகளான மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இரண்டும் தமிழகம் முழுவதும் பெற்றோர்களை அணிதிரட்டி சமச்சீர் கல்வியை அமல்படுத்தவும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை எதிர்த்தும் போராடி வருகிறது. விருதாசலத்தில் இலவச கல்வி உரிமைக்கான மாநாட்டை நடத்தியதோடு சென்னை முதல் மதுரை வரை பல ஊர்களில் ஆர்பாட்டங்களை நட்ந்திருக்கிறது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வியை இரத்து செய்த அ.தி.மு.க அரசின் மசோதாவிற்கு இடைக்காலத் தடை வழங்கியிருக்கிறது. இதில் முக்கிய பங்கு வகித்த ம.உ.பா.மை அடுத்து இந்த தடை உத்திரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்வதையும் எதிர் கொள்வது என்று முடிவு செய்திருக்கிறது.

தொடர்ச்சியாக நடைபெற்றுவரும்  போராட்டங்கள் குறித்த படங்களைப் பார்வையிட :

http://www.vinavu.com/2011/06/13/samacheer-kalvi-protest/

Exit mobile version