நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 40 பேர் பட்டியலை சென்னையில் இன்று வெளியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரப் பயணம் தொடர்பான விவரத்தையும் வெளியிட்டார்.
ராஜீவ் கொலை வழக்கில் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் முறையீடு குறித்து கேட்டதற்கு, “இது எதிர்பார்த்ததுதான். சட்ட ரீதியாக என்னை செய்ய முடியுமோ, அதன்படி ஆராய்ந்து அணுகுவோம். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து மேலும்கருத்து தெரிவிக்க முடியாது” என்றார் ஜெயலலிதா.
தேர்தல் காலத்தில் ஈழத் தமிழர்கள் பிரச்சனையை மையமாகவைத்து பெற்றுக்கொள்ளக்கூடிய சொற்ப வாக்குகளைக் கொள்ளையடிப்ப்தற்காக ஏழு பேரின் உயிரைப் பணயமாக வைத்த ஜெயலலிதா இப்போது உச்ச நீதிமன்றத்தில் பார்போம் என்கிறார். தொண்டர்களோ மக்கள் போராட்டம் வெடிக்கும் என்கின்றனர்.
அப்பாவிகளை மரணபயத்தோடு சிறையில் அடைத்து வைத்திருந்த இந்திய அதிகாரவர்க்கத்தின் பிரதுநிதிகளான ஜெயலலிதாவும், காங்கிரசும், பாரதீய ஜனதாவும் உயிர்களகளை பந்தாடிக்கொண்டிருக்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிவடைந்த பிறகு, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
இடதுசாரிகள் தவிர வேறு கட்சிகள் அதிமுக கூட்டணியில் வர வாய்ப்புள்ளதா எனக் கேட்டதற்கு, “எங்களுக்கு இந்தக் கூட்டணியே போதும்” என்றார்.
கம்யூனிசம் எனபது முதலாளித்துவத்தின் குறித்த வர்க்கத்திற்கான தேர்தல் முறையை நிராகரிப்பதும் ஜனநாயாகத் தேர்தல் முறையை நிறுவுதலுமாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் போலிக் கம்யூனிஸ்ட்டுகள் பாசிஸ்டுகளுடன் கூட்டணை ஏற்படுத்தி ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராகச் செயற்படுகின்றனர்.
அதிமுக சார்பில் பிரதமர் பதவிக்கு தாம் முன்னிருத்தப்படுவது குறித்தும் கேட்டபோது, “எனது கவனம் தமிழகத்தில்தான் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவதுதான் எங்களது குறிக்கோள்” என்று கூறினார்.