“1974 போத்துக்கல் புரட்சி” இல் பங்காற்றியவர்களுக்கான தேசிய அமைப்பு, வருடம் தோறும் ஏப்ரல் 25ம் திகதி விழா ஒன்றை ஏற்பாடு செய்வது வழமை. இம்முறை அந்த விழவை அவர்கள் நிராகரித்துள்ளனர். விழா நடத்துவதற்குப் பதிலாக போத்துக்கள் மக்களை எழுச்சி கொள்ளுமாறும் போராடுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். உலக வங்கியிடமும், சர்வதேச நாணய நிதியத்திடமும் மட்டுமன்று பிணை செலுத்திய பணமாக பல்தேசிய நிறுவனங்களிடமும் போத்துக்கல் அரசு கடன் வாங்கியுள்ளது. அன்னிய ஆதிக்கத்திற்கு போத்துக்கல் அடகு வைக்கப்படுகிறது என்றும், அவர்களுக்காக மக்கள் மீது வரிச் சுமைகள் செலுத்தப்படுவதை மக்கள் உணர்ந்துகொண்டு அரசிற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்றும் இவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போத்துக்கல் நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்போம் என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.