Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எஸ்.எம்.கிருஷ்ணா வழங்கிய 100 கோடி : தொடரும் இந்திய அரசின் திட்டம்

இலங்கையின் மனித வளத்தை மேம்படுத்தும் நோக்கில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவியை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார். தனது 4 நாள் இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புகையில் விமானத்தில் பேசிய அவர், இந்திய நிதி உதவியில், காலே- ஹிக்காடுவா இடையே அமைக்கப்பட்டுள்ள ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்ததார். இந்த நிதி உதவி இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளுக்கு 3 ஆண்டுகளுக்கு பிரித்து அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
1995 ஆம் ஆண்டிலிருந்து மேற்படிப்பிற்காக சிங்கள மாணவ்ர்களுக்கு இலவசக் கல்வியை வட இந்தியப் பல்கலைக் கழகங்களில் இந்திய அரசு வழங்கிற்று. இதனால் உள்வாங்கப்பட்ட மாணவர்கள் இலங்கைக்கு கல்வியோடு இந்திய கலாச்சார ஆக்கிரமிப்பையும் இந்திய சார்பு சிந்தனையையும் காவிக்கொண்டு வந்தனர்.
இந்திய எதிர்ப்புணர்வு கொண்ட தென்னிலங்கை சமூகத்தை இந்திய சார்பாக மாற்றுவதற்கான 1995 இல் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியே இது.

Exit mobile version