Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எவ்வித காரணமும் இல்லாமல் ஐ.நா சபைக்கான இலங்கை தூதர் பணி நீக்கம்!

 

ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை தூதர் தயன் ஜெயதிலக்க எவ்வித காரணமும் இல்லாமல் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக  கருத்து தெரிவித்த தயன் ஜெயதிலக்க, வெள்ளிகிழமையன்று தனக்கு வந்த தொலைநகல் பணிகளை ஒப்படைத்துவிட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கொழும்பு திரும்புமாறு கூறியதாக தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைகழகத்தில் அரசியல் விரிவுரையாளராக பணியாற்றி வந்த இவர், விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை அரசாங்கம் தீவிரப்படுத்தியபோது, அதிபர் மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டார்.

தான் செல்வாக்குடன் இருந்ததாகவும், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கத்தின் மீது போர் குற்றங்களை கொண்டு வர இடம்பெற்ற சர்வதேச முயற்சிகளை முறியடிப்பதில் தான் முக்கிய பங்காற்றறியதாகவும் கூறும் அவர் தம்மை நீக்குவது என்கிற இந்த முடிவு புதிராக இருப்பதாகவும் கூறினார்.

வடகிழக்கு பிராந்திய கவுன்சிலில் இருந்த தயன் ஜெயதிலக்க, அதிகாரத்தை மாகாணங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் என்பதை தீவிரமாக ஆதரித்து வந்தார். மேலும் இலங்கை அரசியல் சாசனத்தில் 13வது சட்டத் திருத்தத்திற்கு அமைய அதிகார பரவலாக்கம் இருக்க வேண்டும் என்று இவர் வாதிட்டு வந்தார்.

Exit mobile version