இச் செய்தியைப் பிரசுரித்திருந்தமைக்காக அப் பத்திரிகையை யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு டிப்ளோமா மாணவர்கள் மத்தியில் அச்சறுத்தியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று மாலை 4மணியளவில் அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் (சிறீதர் தியேட்டர்) மேற்படி டிப்ளோமா மாணவர்களுடன் அமைச்சரின் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, அரச அதிகாரி என்ற போர்வையுடன் முன்னர் சுற்றியவரும், தற்போது ஆளுநரின் செயலாளர் என்ற பெயரில் தற்போது சுற்றித் திரிபவருமான அரசின் அடிவருடி இளங்கோவன், குடாநாட்டிலிருந்து வெளிவரும் தேசியப் பத்திரிகையான யாழ். தினக்குரல் பத்திரிகை, யாழ்.மத்திய கல்லூரி நீச்சல் தடாகம் அமைப்பதற்காக வடக்கின் கஸ்டப்பகுதிப் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 4.5மில்லியன் ரூபா நிதியிலிருந்து வடக்கு மாகாண கல்வியமைச்சினால் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டியிருந்தது. இந்தச் செய்தியை தூக்கிக் காண்பித்துள்ளார்.
இதனையடுத்து அதற்குப் பதிலளித்த அமைச்சர் “என்னுடைய பெடியளை போய் அடியுங்கடா எண்டாலும் அடிக்கிறாங்கள் இல்லை, இனி நான்தான் போகோணும், போய் நாலு சாத்து சாத்தினால்தான் அடங்குவாங்கள்” என்று கூறியுள்ளார். ஈ.பி.டி.பி என்ற அரச துணைக்குழுவின் இரத்தம் படிந்த வரலாறு அதன் பயங்கரவாதச் செயற்பாடுகளின் வரலாறு. டக்ளஸ் தேவா பயங்கரவாதச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டவர் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.