குறைந்தது நான்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் (BSF) சேர்ந்த அரசபடை உறுப்பினர்கள் மாவோயிஸ்டுக்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொராப்பட் மாவட்டத்தில் நடைபெற்ற நிலக்கண்ணிவெடித் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டனர். பொலிஸ் அறிக்கையின் அடிப்படையில் 18 எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொரப்பட் மாவட்டத்த்திலிருந்து ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விசாகப் பட்டணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறுப்படுகிறது.
எல்லைக் காவல் படையினர் மக்கள் மீதான பல தாக்குதல் சம்பவங்களோடும் போலிக் குற்றம் சுமத்தி பல கொலைகளில் ஈடுபட்ட சம்பவங்களோடும் தொடர்புபட்டனர் என மனித உரிமை அமைப்புக்களும் மாவோயிஸ்டுக்களும் பல தடவைகள் தெரிவித்தனர்.
தெரிவித்திருந்தனர். இதே மாவட்டத்திலேயே மாவோயிஸ்ட் தலவர்களில் ஒருவரான தோழர் மாதவ் எல்லப் பாதுகாப்புப் படையினரால் போலிக் குற்றம் சுமத்திக் கொல்லப்பட்டார்.