இந்த விமானத்திற்கான உரிமை மற்றும் பொறுப்பு என்பவற்றை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாது போனதால் அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
எரித்திரியாவில் 10 விமானங்கள் இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்ற விமானப் படை மற்றும் அரச அதிகாரிகள் எரித்திரிய விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் மாத்திரம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு விமானங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எரித்திரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானங்களின் உரிமை மற்றும் பொறுப்பாளிகள் யார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவற்றை விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்ல அனுமதித்ததாக அந்த விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்த நான்கு விமனாங்கள் எரித்திரியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகக் கூறபப்படுகிறது.
இந்த நிலையில், ஸ்லின் ரக விமானங்களை உற்பத்திசெய்யும் சொக்கோ ஸ்லோவிக்கியாவிடமிருந்து இரண்டு விமானங்களைக் கொள்வனவு செய்து அதனைத் தேர்தல் குண்டாகப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.