Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எரிக் சொல்ஹேயம், அலன் கீனன், ஜாஸ்மின் சூக்கா ஆகிய ஏகாதிபத்திய முகவர்களின் லண்டன் உரை

எரிக் சொல்ஹேயம், அலன் கீனன், ஐ.நா.நிபுணர் குழுவில் இடம் பெற்ற ஜாஸ்மின் சூக்கா ஆகியோர் மேடையை நிறைத்திருந்தனர்.அழிவிற்கு காரணம் புலிகள் என்று சொல்கிம் சொன்னார். புலம் பெயர் மக்களை கூட்டமைப்பிற்கு ஆதரவு அளிக்கும்படி அறிவுரை கூறினார்.
பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசனினால் எழுதப்பட்ட ‘ஸ்டில் கவுன்டிங் தி டெட்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் பிரதிநிதி யாஸ்மீன் சூகா மற்றும் சர்வதேச அனர்த்தக் குழுவின் பிரதிநிதி அலன் கீனன் ஆகியோரும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றினர்.
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கைக்கு என்ன நடந்தது என்று கேட்கப்பட்ட போது, குழம்பி விட்டார் ஜாஸ்மின் சூகா.அது சர்வதேச அரசியல்,தன்னால் ஒன்றும் செய்ய முடியாதென்று பகிரங்கமாகக் கூறினார் ஜாஸ்மின்.
‘சரவதேச சமூகம்’ என்று அழைக்கப்படும் உலக அதிகாரவர்க்கம் சர்வதேச அரசியலின் பெயரால் இலங்கையில் நடத்திய மனிதப் படுகொலையின் முகவர்களான இந்த முகங்கள் இப்போது தம்மை அடையாளம்காட்ட ஆரம்பித்திருக்கின்றன. அனைத்துத் தரப்பிலும் இருந்து உலக உளவு நிறுவனங்களின் நிதி மற்றும் அதிகார பலத்தோடு இலங்கையில் நடைபெறும் இன அழிப்பிற்கு எதிரான எஞ்சியிருக்கும் ஈனக் குரல்களையும் அழிப்பதற்குத் தயாராகிவிட்டன.

Exit mobile version