வியட்நாமில் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்த்து கொண்டதற்காக அப்பள்ளியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை.
தங்களுடைய வாழ்வில் புதிய அத்தியாயம் என்று இருந்த எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது இந்த குழந்தைகளுக்கு அவர்கள் இருக்கும் மையத்திலேயே இந்த பள்ளிக்கூட ஆசியர்கள் கல்வியை போதிக்கவுள்ளனர்.
வியட்நாமில் சுமார் மூன்று லட்சம் பேர் ஹெச்.ஐ.வியோடு வாழ்ந்து வருகின்றார்கள் என்று ஐ.நா கணக்கிட்டுள்ளது. இவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும், எந்தவித பாகுபாடும் காண்பிக்க கூடாது என்று சட்டம் கூறுகிறது.
இதனை நடைமுறையில் காண அரசாங்கமும் அமைப்புகளும் முயற்சிக்கின்றன, அனால் சமுதாயத்தில் பாகுபாடு நீடித்து கொண்டு தான் இருக்கிறது.