Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எமது இணையம் ஹக் செய்யப்படவில்லை : லக்ஸ்மன் ஹூலுகல்ல

laxmanதேசிய பாதுகாப்பு ஊடக மையம் ஹக் செய்யப்பட்டு அந்த இணையம் இயக்கமற்ற நிலையில் இருந்ததும், ஹக்கர்கள் பல தகவல்களை வெளியிட்டிருந்தமையும் அறிந்தததே. இது குறித்து கருத்துத் தெரிவித்த நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல அப்படி எதுவும் நடைபெறவில்லை என்றார். தேசிய பாதுகாப்பு ஊடகமையத்தின் கணனியில் இணைப்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்கக் கூடியவர்களின் பெயர்களும் குறிச்சொற்களும் ஹக்கர்களால் வெளியிடப்பட்டன. இலங்கையில் மட்டுமல்ல மேலும் 20 நாடுகளின் அரச இணையங்களை இவர்கள் தாக்கியுள்ளனர்.
பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் தொடர்புடையவர்கள் இதுகுறித்து இதுவரை எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை.
ரவீந்திரன் மாணிக்கம் காருமதில் என்ற பெயரை உடைய தமிழ் நாடு அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவரின் பெயரும் வெளியான பெயர்களில் ஒன்றாகும்.

Exit mobile version