Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

என் பெயரில் வெளியிடப்பட்ட கட்டுரை அபாண்டமானது- கட்டுரையை நான் எழுதவில்லை : தஸ்லிமா மறுப்பு

ஷிமோகா மற்றும் ஹாசன் நகர்களில் ஏற்பட்ட கலவரங்களுக்குக் காரணமான கட்டுரையைத் தான் எழுதவில்லை என்று இந்தியாவில் தஞ்சம் அடைந்து வாழும் வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் கூறியுள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த அறிக் கையில் கர்நாடகா செய்தித்தாளுக்கு கட்டுரை எதையும் எழுதித் தரவில்லை என்று தஸ்லிமா மறுத்துள்ளார். தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அப்பட்டமான முயற்சி என்றும், சமுதாயத்தில் வன்முறையைக் கிளப்பி விட தன்னுடைய எழுத்துக்களைத் திரித்துப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தஸ்லிமா எழுதியதாகக் கூறப்படும் கட்டுரை முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தி விட்டதாகக் கூறி ஷிமோகாவிலும், ஹாசனி லும் முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்கடங்காததால் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஒருவர் மரணமடைந்தார். இதுவரை இருவர் மாண்டுள்ளனர்.

தன் பெயரில் வெளியிடப்பட்ட கட்டுரை அபாண்டமானது. முகமது நபி பெண்கள் அணியும் முகத்திரைக்கு எதிரானவர் என்றுதான் எழுதிய கட்டுரைகள் எதிலும் குறிப்பிட்டதில்லை. எனவே இது ஒரு திரித்து எழுதப்பட்ட கட்டுரை என்று தஸ்லிமா அறிக்கையில் தெரிவித்துள்ளார். வெளியிட்ட அறிக்கைக்கு மேல் எதுவும் கூற விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

 கலவரங்களால் பாதிக் கப்பட்ட ஷிமோகா, ஹாசன் நகரங்களில் இயல்பு நிலைமை திரும்பி விட்டது என்று கர்நாடகா சட்ட மன்றத்தில் முதல்வர் பி. எஸ்.எடியூரப்பா தெரி வித்தார். சென்ற இரவு முதல் வன்முறைகள் எதுவும் நடக்கவில்லை. சட்டத்தைக் கையில் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஷிமோகா, ஹாசன் மற்றும் பெங்களூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டுரையை வெளியிட்ட செய்தித்தாள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களில் 33 பேரும், 25 காவலர்களும் காயம் அடைந்துள்ளனர். வன் முறையில் 74 கடைகளும், 50 வாகனங்களும் தீக்கிரை யாக்கப்பட்டன. இருவர் பலியாகியுள்ளனர் என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.

Exit mobile version