Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

என் உயிர் இருக்கும் ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பேன் – பேரா.ராமசாமி.

 

மலேஷியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும், ஈழ விடுதலை ஆதர்வாளருமான பேராசிரியர் ராமசாமி தமிழகத்தில் நடைபெறும் செம்மொழி மாநாட்டிற்கு வரக்கூடாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய உள்துறை அமைச்சக்த்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து அவரது பெயரும் எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கருணாநிதி உள்ளிட்ட இந்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசியதன் விளைவாய் ராமசாமிக்கு தன் எதிர்ப்பைக் கட்டியுள்ள கருணாநிக்கு தன் எதிர்ப்பைக் காட்டியுள்ளார் ராமசாமி,

” கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும் மே 18 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் மாநாட்டிலும் நான் கலந்துகொண்டேன். இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது 40, 000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு தமிழக அரசும், இந்தியாவை ஆட்சி புரியும் காங்கிரஸ் உடந்தையாக இருந்திருக்கிறது. இந்த துரோகத்தை மறைக்க முடியாது.என் உயிர் இருக்கும் வரை தமிழீழ மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன். இந்த மாதம் 23 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி வரை கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் நான் கலந்து கொள்ளமாட்டேன். கடந்த ஜனவரி மாதம் டெல்லி பிரவாசி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வரும்படி இந்திய அரசாங்கமே எனக்கு அழைப்பு அனுப்பியிருந்தது. ஆனால், அந்த அழைப்பை நான் முற்றாக புறக்கணித்தவன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மட்டுமே எனக்குத் தலைவர். நான் பெரியார் பாசறையைச் சேர்த்தவன் என்றார் ராமசாமி.

Exit mobile version