இன்று இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை இனச் சுத்திகரிப்பாக மேலெழுந்துள்ளது. கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் ஏற்கனவே சிறுபான்மை ஆக்கப்பட்டுவிட்டார்கள். வடக்கில் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு இனச் சுத்திகரிப்பாக தொடர்கிறது. பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை இராணுவத்தில் அவர்களைப் பலவந்தமாக இணைத்துக்கொள்வது மற்றும் பாலியல் வன்முறை வரை விரிவடைந்துள்ளது.இந்த நிலையில் கடந்தகால தவறுகளைக் கற்றுக்கொண்டு முன்னோக்கிய அரசியலை முன்வைப்பது அவசியமானது. இது குறித்த கருத்தரங்கு ஒன்று 08.12.2012 சனியன்று லண்டன் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக உணர்வும் மக்கள் பற்றும் உள்ள நண்பர்கள் இதில் கலந்துகொள்ளுமாறு நட்புடன் அழைக்கப்படுகின்றனர். உரையாடலில் கலந்துகொள்ள விரும்புவோர் தமது வருகையை inioru@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்குமாறு தோழமயுடன் வேண்டப்படுகின்றனர்.