Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

என்னுடைய தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் நெருக்கமான தோழர் நீங்கள்!:ஜோதிபாசுவிடம் மாரடோனா.

07.12.2008.

உலக கால்பந்து ரசிகர் களின் கதாநாயகனான மார டோனா மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவரும் மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வருமான ஜோதிபாசு வை ஞாயிறன்று கொல் கத்தாவில் சந்தித்தார்.

‘என்னுடைய தலைவ ரான பிடல் காஸ்ட்ரோவின் நெருக்கமான தோழர் நீங் கள், அந்த வகையில் எனக் கும் நீங்கள் மிகவும் நெருக்க மான தலைவராக விளங்கு கிறீர்கள்’ என்று ஜோதிபாசு விடம் மாரடோனா நெகிழ்ச்சியுடன் தெரிவித் தார்.

பிடல் காஸ்ட்ரோ கொல்கத்தாவிற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் ஆல் பத்தை மாரடோனாவுக்கு ஜோதிபாசு பரிசாக வழங்கினார். மாரடோனா நீண்டகாலம் வாழவும், மேலும் பல வெற்றிகளை குவிக்கவும் ஜோதிபாசு வாழ்த்து தெரிவித்தார். 

Exit mobile version