Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எதேச்சதிகாரத்தைச் சட்டமாக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரும் அரசு

எதேச்சாதிகாரத்தை சட்டமாகும் நோக்கிலேயே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்களிடம் கோரி நிற்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சர்வாதிகார ஆட்சி ஒன்று உருவாக்கப்படுவதனை தவிர்க்க சகல மக்களும் ஒன்றிணைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனநாயகத்தையும், ஊடக சுதந்திரத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டியது மக்களின் கடமை எனவும், அவ்வாறு தவறும் பட்சத்தில் மக்களது சுதந்திரம் பறிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடக சுதந்திரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் தேசப்பற்றாளர்களாகவும், எதிரானவர்கள் தேசத் துரோகிகளாகவும் நோக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version