பெரும் எதிர்பார்ப்புகளுடன் கிழக்கு மாகாணசபையை ஆரம்பித்தாலும் தற்போது எதுவும் செய்யமுடியாதுள்ளது. 8 மாதங்களிற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலத்தை கூட அரசு அமுல்படுத்தும் அதிகாரத்தை வழங்கவில்லை.
மாகாணசபையினால் உருவாக்கப்பட்ட இன உறவுப்பணியகத்தைக் கூட சட்டரீதியாக அமுல்படுத்த இயலாது. இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு முஸ்லீம் வர்த்தகர் சங்கம் சேகரித்த வன்னி அகதிகளுக்கான நிவாரணப்பொருள் கையளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வு மட்டக்களப்பு ஜாமியுசலல் பள்ளிவாசளில் நடைபெற்றது.