Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எதிர்காலம் இருண்டு கிடக்கிறது- வைகோ.

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடரும் நிலையில் மத்திய, மாநில அரசை கண்டித்தும் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன், .தி.மு.., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, இலங்கை ராணுவத்தினர் தாக்கி 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை இறந்துள்ளனர். இதுபோல, ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இலங்கை அரசை ஒரு முறை கூட மத்திய அரசு கண்டித்ததில்லை. மீனவர்களுக்கு ஆதரவாக உள்ளது போல, முதல்வர் கருணாநிதி ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளார். இலங்கை போரில் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்துக்கு யார் தைரியத்தை கொடுத்தது? இதுபோல சம்பவம் தொடராமல் இருக்க, இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன். தமிழக மீனவர் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாட்டை யாரும் காப்பாற்ற முடியாது. இங்குள்ள மீனவர்களின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்ளத்தான் முடியும். எதிர்காலம் இருண்டு கிடக்கிறது என கவலைப்படும் மீனவர்களின் நிலை மாறும்.காலம் மாறும். மீனவர்களின் இத்தகைய நிலைமைக்கு காரணமான இலங்கை அரசுக்கும், நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கிறேன். வரலாற்று சிறப்பு மிக்க வேதாரண்யத்தில் பாடலால் திருக்கோவில் கதவு திறந்தது போல, மீனவர் பிரச்னைக்கும் ஒரு விடிவு காலம் வரும் என்றார்.

Exit mobile version