Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எதிர்கட்சிகளின் கூட்டு மே தின நிகழ்வுகள் இன்று யாழில்

எதிரணிக் கட்சிகளின் கூட்டு மே தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டு மே தினத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமாஜக் கட்சி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவ சிகல உறுமய ஆகியன கலந்து கொள்கின்றன.

கூட்டு மேதினப் பேரணி இன்று பிற்பகல் 1 மணிக்கு நல்லூர் கைலாசப்பிள்ளையார் கோயில் முன்றிலில் ஆரம்பமாகும். அங்கிருந்து கோவில் வீதி வழியாக பேரணி யாழ்ப்பாணம் குருநகர் சென்.றோக் விளையாட்டு மைதானத்தைச் சென்றடையும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில். அங்கு பொதுக் கூட்டம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நவ சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண, ஐக்கிய சோஷலிசக் கட்சித் தலைவர் சிறிதுங்க ஜெசூரிய, நவசிகல உறுமைய கட்சித் தலைவர் சரத் மன்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற் சங்கத் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version