Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எஞ்சியிருக்கும் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும் விலைக்கு வாங்கப்படுகின்றனர்?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநான் முக்கிய பங்காற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமயில் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இவ்வாறான தொடர்பு ஒன்றை இனக்கொலையாளிகளுடன் புலி மற்றும் புலி எதிர்ப்பு சார்ந்த மாபியாக் கும்பல்கள் பேணி வருகின்றன. எஞ்சியிருப்போரை விலைக்கு வாங்கும் முயற்சி நடைபெறுவதற்கான அறிகுறி இது.

Exit mobile version