Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எகிப்த்து மற்றும் துனிசிய நாட்டில் நடந்த போராட்டங்கள் போன்று இலங்கையிலும் போராட்டம் நடத்தத் தயார் : ஜே.விபி

ஜனநாயகம் மற்றும் சமத்துவத்தை வென்றெடுப்பதற்கான ஆர்வம் உலகில் அதிகரித்திருப்பதாகவும் அதற்குத் தாம் தலைமை வழங்கத் தயாரகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் போராட்டத்திற்கு தயாராகும் நிலையில் எகிப்து, துனிசியா போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்கள் போன்ற போராட்டங்களை நடத்தி அதற்குத் த்லைமை வழங்க ஜே.வி.பி தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை அரசைக் கடுமையாகக் கண்டித்த சோமவன்ச இலங்கையில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும் என்றார்.ஜே.வி.பி கட்சியின் ஆறாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  தமிழ்ப் பேசும் மக்களின் 60 வருட காலப் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் குறித்தோ அதற்கான தீர்வு குறித்தோ எதுவும் குறிப்பிடாத ஜே.வி.யி வன்னியில் நடந்த இனப்படுகொலையில் இலங்கை அரசிற்கு ஆதரவு வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version