எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக் வெளியேறிபின்னர் இப்போது மீண்டும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமரிக்க அரசின் மறைமுக ஆதரவுடன் இராணுவ ஆட்சியாளர்கள் எகிப்திய அரசைக் கைப்பற்றியமை தமது எழ்ச்சியைத் திசைதிருப்பியது போன்றதாகும் என இப்போது போராடும் மக்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலிய தூதரகத்தைச் சுற்றிவளைத்துள்ள மக்கள் மீது ஆட்சி நடத்தும் இராணுவம் தாக்கியதில் ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர், மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தனது தூதரகத்தை மூடியுள்ளது அதே வேளை எகிப்து பாதுகாப்பான பிரதேசம் எனக் கருதும் நிலையில் மறுபடி தூதரகத்தை திறந்துவைப்பதாகக் கூறியுள்ளது.