Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

எகிப்தில் மக்கள் போராட்டங்கள் தொடர்கின்றன..

எகிப்தில் தொடர்ச்சியான மக்கள் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதை ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. எகிப்தில் ஸ்ரேலியத் தூதரகம் தாக்கப்பட செய்தியைப் பிரதானப்படுத்தும் மேற்குலக ஊடகங்கள் அங்கு தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்களை திட்டமிட்டு மறைக்கின்றன. நேற்றைய தினம் தலை நகரில் நடைபெற்ற ஊர்வலத்தின் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் பலர் காயமடைந்தனர். மருத்துவர்களும் ஆசிரியர்களும் தற்போது பெருமளவில் வேலை நிறுத்ததிலும் அதனை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்பிரல் மாதத்திலிருந்து வேலை நிறுத்தங்கள் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ள போதும் இப் போராட்டங்கள் அரசின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

Exit mobile version