
ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றும் போராட்டத்தில் குறைந்தது 846 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
அமரிக்க ஆதரவுப் இராணுவத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத நிலையிலேயே எகிப்திய இராணுவம் உள்ளது. இதே வேளை மேற்குலக ஊடகங்கள் எகிப்தில் வன்முறை அதிகரித்திருப்பதாகவும் ஜனநாயக வழிமுறைக்கு இது தடையாக அமைந்திருப்பதாகவும் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன.
இரணுவ வன்முறைக்கும் கொலைவெறிக்கும் எதிரான மக்கள் போராட்டம் உறுதியுடன் தொடர்கின்றது. அவர்களின் போராட்டங்களை வழிநடத்தும் அரசியல் கட்சி இல்லாமை இன்றுவரை போராட்டத்தின் மிகப்பெரும் குறைபாடாகவே கருதப்படுகின்றது.