
இதற்காக ஐ.எம்.எப் இணக்கத்தின் அடிப்படையில் மக்களின் நாளந்த பாவனைப் பொருட்களின் விலையை அதிகரிப்பதும் அதற்கான வரி வீததை அதிகரிப்பதும் மோர்சி அரசு தொடர்ந்து நிலைகொள்வதற்கான தேவையாக அமைந்தது. உலகின் எண்ணை வளம் கொண்ட செல்வந்த நாட்டை சுரண்டிய அமரிக்காவும் அதன் உள்ளூர் முகவர்களும் இன்று மக்களின் அடிப்படைத் தேவைகளையும் அழிக்க முற்படுகின்றனர். இந்த நிலையில் மோர்சியின் புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். இந்த அரசியல் அமைப்புத் திட்டத்தை ஐ.எம்.எப் ஆதரிக்கிறது. ராஜபக்சவைப் போன்று சர்வாதிகாரத்தையும் அனைத்து அதிகாரத்தையும் நிறுவுவதற்கான இந்த அரசியல் அமைப்பை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகின்ரனர்.
