Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊவா மகாணசபைத் தேர்தல் :அச்சுறுத்தல்களின் மத்தியில் அரசுக்கு எதிராக வாக்களித்த மக்கள்

voteஇலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற மாகாண சபைக்கான தேர்தலில் எதிர்க்கட்சியின் ஆதரவு பிரதேசங்களில் இராணுவம் மக்களைச் சாவடிகளுக்குச் செல்லவிடாமல் தடுத்தது. பலர் தாக்கப்பட்டனர். அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பொதுவாக பதுலையின் சில பகுதிகளிலும் ஹப்புத்தள பகுதியிலும் அரச பயங்கரவாதம் அதிகரித்துக் காணப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உவா மாகாணத்தில், 2009ல் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள, 34 இடங்களில், 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்த, ராஜபக்ச தலைமையிலான கூட்டணி, நேற்று முன்தினம் நடந்த தேர்தலில், 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது; எனினும், ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, ஐக்கிய தேசிய கூட்டணி கட்சி, 15 இடங்களில் வெற்றி பெற்றது.கடந்த 2009ல், நடைபெற்ற தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட, இந்த முறை, 23 சதவீத ஓட்டுகளை, எதிரணியான, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 349,906 (51.25%)
17 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி – 274,773 (40.24%)
13 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி – 36,580 (5.36%)
2 ஆசனங்கள்
என்ற வாக்குகளின் அடிப்படையில் மகிந்த கட்சி தோல்வியடைந்துள்ளது. போருகுப் பின்னர் அசியாவின் அதிசயமாக மாற்றுவேன் எனக் கூறிய ராஜபக்ச ஆசியாவில் வறுமையால் தற்கொலை செய்துகொள்ளும் மக்கள் அதிகமாக உள்ள நாடாக இலங்கையை மாற்றியுள்ளது.

Exit mobile version