புதிய பிரதம நீதியரசராக, முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸை நியமிப்பதற்கு நாடாளுமன்றப் பேரவை அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை பிரதம நீதியசராக நியமிக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கு நாடாளுமன்ற பேரவை சற்றுமுன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது.
மோஹான் பீரிஸ் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர். பிரகீத் எக்னெலியகொட என்ற ஊடகவியலளரின் படுகொலையை மறைப்பதற்கும், பல ஊழல் விவகார ஆதரங்களை அழிப்பதற்கும் துணை போனவர் பீரிஸ்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாசிசம் அனைத்துத் துறைகளையும் தனது கட்டுப்பாடுக்கு உட்படுத்தும் என்பது வரலாறு. பாசிசம் உலக முதலாளித்துவத்தின் ஒரு பகுதி. அதன் நெருக்கடி காலகட்ட்த்திற்கான தேவை. இதனால் உலக முதலாளித்துவ நாடுகளின் எதிர்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்திருக்கும்.