Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊழல் திமுக மந்திரி ராசா வெளிநாடு செல்ல அனுமதியில்லை?

இந்தியாவின் ஆகப்பெரிய ஊழல் என்று சொல்லப்படுகிற அலைவரிசைக் கற்றைகள் ஒதுக்கபப்ட்ட ஸ்பெகடரம் 2 ஊழல் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் திமுகவின் மத்திய அமைச்சர் ஆ.ராசா வெளிநாடு செல்வதற்கான அனுமதியை பிரதமர் அலுவகம் தாமதப்படுத்துவதாகத் தெரிகிற்து. எஸ்தோனியா நாட்டுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் . ராசா ரத்து செய்தார். ரதமர் அலுவலகத்திடமிருந்து அனுமதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இந்தப் பயணத்தை ராசா ரத்து செய்துள்ளார். ஜூன் 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை எஸ்தோனியா நாட்டில் நடைபெறவுள்ள மின்னணு ஆட்சிமுறை குறித்த கருத்தரங்கில் பங்கேற்க அமைச்சர் ராசா தலைமையில் 4 எம்.பி.க்கள், தொலைதொடர்புத்துறையைச் சேர்ந்த 15 அதிகாரிகள் அடங்கிய குழு செல்லவிருந்தது. வெளிநாடு செல்ல அனுமதி அளிக்குமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தொலைதொடர்புத்துறை அமைச்சரின் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பயணத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துவிட்டது. ஆனால் பிரதமர் அலுவலகத்தின் அனுமதியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.இதையடுத்து ராசா தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Exit mobile version