அமரிக்க மற்றும் பிரித்தானியப் பல்கலைக் கழகங்களில் கல்விகற்கும் ராஜபக்ச குடும்பத்தைச் சார்ந்த நூற்றுக் கணக்கானோருக்குப் பெருந்தொகைப் பணம் இலங்கை அரச பணத்திலிருந்து செலவு செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுடைய பல்கலைக் கழகக் கட்டணம், இருப்பிட வசதி, வாழ்க்கைச் செலவு ஆகியன இலங்கை அரச பணத்திலிருந்து பாதுகாப்புச் செலவினத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது என பெயர் வெளியிடவிரும்பாத வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகின. ஒரு மாணவருக்கு வருடத்திற்கு £25000 செலவு செய்யப்படுவதாக அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.