உலகம் முழுவதும் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்காகவென எகாதிபத்திய நிதி நிறுவனங்களின் பணக் கொடுப்பனவுகள் ஊடாகச் செயற்படும் தன்னார்வ நிறுவனம் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்னாஷனல் என்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் இயக்குனர்களின் ஊழல் விவகாரங்கள் இனியொரு உட்பட பல ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ட்ரான்ஸ்பரன்சியை ஒத்த தன்னார்வ நிறுவனம் போன்று செயற்படும் ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம் அரசுக்கு எதிரான மக்களின் உணர்வு ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலாக மாறாமல் கவனித்துக்கொள்வதே. டெல்லியில் முதல்வரக பதவியேற்றுள்ள அர்விந்த் கெஜ்ரிவால் முன்னை நாள் தன்னார்வ நிறுவன ஊழியர். அரவிந் போன்றே தன்னார்வ நிறுவனங்களும் அரசியல் வேண்டாம் என்று ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கின்றன.
அர்விந்த் கெஜ்ரிவால் இரண்டு நாட்களுக்கு முன்னர், மத்திய அரசியல் தலைவர்களின் ஊழல் பெயர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தினார். இப்போது மாநிலங்கள் வாரியாக ஊழல் செய்த அரசியல் தலைவர்களின் பெயர் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளார்
இன்று ஊழல் என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டு பல்தேசிய வியாபார நிறுவனங்களின் கூட்டுச் சுரண்டலாக மாறியுள்ளது. பல்தேசிய காப்ரட் நிறுவனங்களுக்கு சந்தப்படுத்தும் சூழலை ஏற்படுத்துவதை அபிவிருத்தி எனக் கூறும் இவர்கள் ஊழலை நிறுவனமயப்படுத்தக் கோருகின்றர்களே தவிர, அழிக்கக் கோரவில்லை.