Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊழலை ஒப்புக்கொள்ளும் இலங்கையரசு: தேர்தல்கால நாடகம்

pavithra
பவித்ரா வன்னியாராச்சி

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் சுமார் பதினாறு கோடி ரூபா ஊழல் நடந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் அரசாங்கம் நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த மின்சக்தி, எரிபொருள்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இந்தத் தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் மின்சார சபை குறித்த 16 கோடி ரூபா அளவில் நட்டமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக அதே காலகட்டத்தில் இடைத்தரகர் நிறுவனங்களின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரியிலும் சுமார் நூற்றைம்பது கோடிரூபா பணம் விரயமாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லைக்காவுடன் ஒப்பந்த அடிப்படயிலான ஊழல் மட்டுமே நூறு மில்லியன் டொலர்கள். இது போல, கல்வி நிறுவனங்களின் தனியார் மயப்படுத்தலிருந்து இராணுவ மயமாக்கல் வரை ஒவ்வொரு அங்கத்திலும் ஊழல் மட்டுமே இலங்கை அரசின் அடிப்படை. ஆக, நுரைச்சோலை ஊழலை தானே இந்த அரசு வெளிக்கொண்டுவருவது தேர்தலுக்கான கண்துடைப்பு.

Exit mobile version