
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற தொழில், வர்த்தகப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் இசமீப காலத்தில் நிகழ்ந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் பெரு நிறுவனங்களிடையே ஒரு வித அச்ச உணர்ச்சி பரவியிருப்பதை நான் உணர்ந்துள்ளேன். எந்த வித அச்சமும் இன்றி, நமது தொழில் துறை தன்னம்பிக்கையுடன் முன்னேறலாம் என்று நான் உறுதி கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.
ரத்தன் டாடா, ராகுல் பஜாஜ், அஜிம் பிரேம்ஜி, சுனில் பார்த்தி மிட்டல், தீபக் பரேக், சுவாதி பிரமால், குமாரமங்கலம் பிர்லா உள்ளிட்ட பெரு நிறுவன தொழிலதிபர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் இந்த உறுதியளித்த பிரதமர் மன்மோகன் சிங், ஊழலை ஒழிக்கவும், அரசு நிர்வாகம் வெளிப்படையாக செயல்படவும் சட்ட ரீதியான சில நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்திய ஊழல் சாம்ராஜ்யத்தின் மன்னர்களான இப் பெருமுதலாளிகள் மத்தியில் ஊழலை ஒழிப்பதாக இந்தியப் பிரதமர் சூழுரைத நகைச்சுவை தேர்தல் காலத்தில் அரங்கேறியுள்ளது.அவர்களின் ஊழல் தொடர்வதற்குப் மன்மோகனின் பச்சைக்கொடி சமிக்ஞை தான் இந்த உரை எனக் கருதப்படுகிறது.